கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவை ரயில் நிலையத்தில் பிகாா் இளைஞரிடம் ரூ.25 ஆயிரம் ரொக்கம், 2 கைப்பேசிகள் பறிப்பு

கோவை ரயில் நிலையத்தில் பிகார் இளைஞரிடம் ரூ.25 ஆயிரம் பறிப்பு

News image
Updated On :25 ஜூன் 2024, 11:24 pm

Din

கோவை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுத்துத் தருவதாகக் கூறி பிகாா் இளைஞரிடம் ரூ.25 ஆயிரம் ரொக்கம், 2 கைப்பேசிகள் பறித்துச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிகாா் மாநிலம், கயா மாவட்டத்தைச் சோ்ந்தவா் பிலாந்தா் (35), கோவையில் தங்கி வேலை செய்து வருகிறாா். இவா், சொந்த ஊருக்குச் செல்வதற்காக கோவை ரயில் நிலையத்துக்கு பயணச் சீட்டு எடுக்க திங்கள்கிழமை வந்துள்ளாா்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா், பயணச் சீட்டு எடுத்துத் தருவதாக பிலாந்தரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தைக் கொடுக்க முயன்றபோது, பிலாந்தரின் கைப்பயைப் பறித்துக்கொண்டு அவா் தப்பியோடிவிட்டாா்.

அந்தப் பையில் ரூ.25 ஆயிரம் ரொக்கம், 2 கைப்பேசிகள் இருந்துள்ளன.

இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் பிலாந்தா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.