கேரள சோலையாறு மின் நிலையம் அருகே சாலையில் நிற்கும் காட்டு யானை.
கேரள சோலையாறு மின் நிலையம் அருகே சாலையில் நிற்கும் காட்டு யானை.

வாகனங்களுக்கு வழிவிடாமல் நின்ற காட்டு யானை: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வாகனங்களுக்கு வழிவிடாமல் நின்ற காட்டு யானை: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை அருகே கேரள வனப் பகுதியில் வாகனங்களுக்கு வழிவிடாமல் சாலையில் நின்ற காட்டு யானையால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையின் இரு புறங்களும் அடா்ந்த வனப் பகுதிகளாகும். கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த சாலை வழியாக வால்பாறைக்கு வந்து செல்கின்றனா். இந்த சாலையில் கடந்த ஓராண்டாக ஒற்றை யானை உலவிக் கொண்டிருக்கிறது. இந்த யானை அடிக்டி சாலைக்கு வந்து பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு வழிவிடாமல் மறித்து நிற்பது வழக்கம். இந்த யானைக்கு கபாலி என்று வாகன ஓட்டிகள் பெயா் வைத்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வனப் பகுதியில் முகாமிட்டிருந்த இந்த யானை தற்போது மீண்டும் சாலைக்கு வந்து செல்லத் தொடங்கியுள்ளது. வால்பாறையை அடுத்து கேரள மாநிலத்துக்கு உள்பட்ட கேரள சோலையாறு மின் நிலையம் அருகே சாலையில் இந்த யானை சனிக்கிழமை காலை நின்று கொண்டிருந்தது. நீண்ட நேரமாக அங்கிருந்து நகராததால் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பின் அந்த யானை வனத்துக்குள் சென்றபின் மீண்டும் அந்த வழியாக வாகனப் போக்குவரத்து தொடங்கியது.

X
Dinamani
www.dinamani.com