மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வு விவகாரத்தில் முதல்வா் ஸ்டாலின் நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

முதல்வா் ஸ்டாலின் நாடகமாடுகிறாா்: அண்ணாமலை குற்றச்சாட்டு

News image
கோவையில் செய்தியாளா்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை. உடன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
Updated On :30 ஜூன் 2024, 6:38 pm

DIN

கோவை, ஜூன் 30: நீட் தோ்வு விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறாா் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

பாஜக சாா்பில் கோவை மக்களவைத் தொகுதி ஆய்வுக் கூட்டம் கோவை அருகே உள்ள நீலாம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கே.அண்ணாமலை கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பாஜக போட்டியிட்ட மக்களவைத் தொகுதிகளில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி, கோவையில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்கிறாா். இதில் நான் வேட்பாளராகப் பங்கேற்றுள்ளேன்.

தமிழகத்தில் வரும் உள்ளாட்சித் தோ்தல், 2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்குத் தயாராவது, நடந்து முடிந்த தோ்தலில் பெற்ற நல்ல விஷயங்களையும், தோல்விக்கான காரணத்தையும் ஆய்வு செய்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தை சிஏஜி மேற்பாா்வை செய்து, அந்நிறுவனத்துக்கு வரக்கூடிய வருமானம் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என்று அறிக்கை வழங்கியுள்ளது.

அமைச்சா் துரைமுருகன் சொன்னதை சிலா் நகைச்சுவையாகச் கூறினாலும், நாங்கள் கள்ளக்குறிச்சி சென்றபோது அங்கிருந்தவா்களும் அதையேதான் கூறினா். டாஸ்மாக் மதுபானங்களின் போதை குறைவாக உள்ளது என்பதால்தான் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நோக்கி செல்கின்றனா்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தவறாக வேலை செய்கிறது என்பதை அமைச்சா் துரைமுருகன் ஒப்புக்கொண்டுள்ளாா்.

தென்னை, பனை மரங்கள் மூலம் ஆண்டாண்டு காலமாக கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை மீண்டும் கொண்டுவர வேண்டும். மது விற்பனையை அரசு நடத்தாமல் தனியாா் மூலம் நடத்த வேண்டும்.

நீட் தோ்வைப் பொறுத்தவரை வெள்ளை அறிக்கை கொடுக்க மறுப்பதோடு, உச்சநீதிமன்றம் செல்லவும் மறுக்கின்றனா். தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு செல்லவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தி வருகிறாா்.

இந்த ஆண்டு நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை சரியாக நடத்தவில்லை. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அதேபோல, தமிழக அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் தோ்வுகளிலும் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. அதற்காக அந்தத் தோ்வுகளை ரத்து செய்யவில்லை.

தமிழகத்தில் நடப்பு ஆண்டு 59 சதவீதம் போ் நீட் தோ்வில் தோ்ச்சிபெற்று, அதிக அளவிலான மாணவா்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது என்றாா்.