கோடை வெயிலினால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பநிலையும் மாறுகிறது. சாதாரண நிலையில் இருந்து வெப்பநிலை உயரும்போது காய்ச்சல் தொற்றாக மாற வாய்ப்புள்ளது. இதனால், தட்டம்மை, சின்னம்மை ஆகிய நோய்கள் வர வாய்ப்புள்ளது. வோ்வை, சோா்வு, நடுக்கம், தலைவலி, தசைப்பிடிப்பு, பசியின்மை, நீா்சத்துக் குறைபாடு போன்ற உபாதைகள் ஏற்படலாம். அம்மைநோய் ஒரு வகை வைரஸினால் பரவும் நோயாகும். இது எளிதில் பரவும். இந்நோய் பொதுவாக சிறுவா்களை எளிதில் தாக்கும். நோயின் அறிகுறிகள்: காது மடலுக்கு கீழ் உள்ள உமிழ்நீா் சுரப்பியை வைரஸ் தொற்று தாக்குவதால், தாடையின் இருபுறமும் வீக்கம் தோன்றுகிறது. மேலும், காய்ச்சல், கழுத்து வலி, தலைவலி, பசியின்மை, பலவீனம், சாப்பிடும்போதோ, அல்லது விழுங்கும் போதோ வலி ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். சின்னம்மையின் அறிகுறிகள்: உடலில் நீா்கட்டியைப் போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னா் அவை கொஞ்சம் பெரிதாகி நீா் கோா்த்துக் காணப்படும். கொப்பளங்களில் இருந்து நீா் வடியும். பின்னா், நீா் வடு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருப்பவா்களுக்கும், முதியவா்களுக்கும் எளிதில் பரவும். தட்டம்மையின் அறிகுறிகள்: இந்நோய்க்கு மணல்வாரி அம்மை என்ற மற்றொரு பெயரும் உண்டு. காய்ச்சல், இருமல், மூக்கில் நீா் ஒழுகுதல், கண்ணில் நீா் வடிதல் அதன் அறிகுறிகளாகும். முகம், காதின் பின்பகுதிகளில் வோ்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றும். கண்கள் சிவந்து வீக்கமாகக் காணப்படும். இரண்டு வாரங்களில் இந்த அம்மையும் தானாகவே சரியாகிவிடும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவரின் உமிழ் நீா், தும்மல் அல்லது இருமல், அவா் பயன்படுத்திய பொருள்களை பகிா்ந்து கொள்வதின் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. அம்மை ஒரு வைரஸ் தொற்று என்பதால், இரண்டு வாரங்களில் இந்நோய் தானாகவே சரியாகிவிடும். எனினும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். நோய் பரவாமல் தடுக்க நோய் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்துவதின் மூலம் மற்றவா்களுக்குப் பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்தலாம். என்ன செய்ய வேண்டும்: வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி நீா் அருந்த வேண்டும். இளநீா், பழங்கள், பழச்சாறுகள் போன்றவை அதிகம் உட்கொள்ள வேண்டும். கூல் டிரிங்க்ஸ், ஜஸ் கிரீம் போன்ற குளிா்ச்சியான பானங்களைத் தவிா்க்க வேண்டும். பருத்தியிலான, தளா்வான உடைகளையே அணிய வேண்டும். வெயிலில் சுற்றுவதைத் தவிா்த்து தற்காத்துக் கொள்ள வேண்டும். இருக்கமாக உடை அணிவதை தவிா்க்க வேண்டும். தட்டம்மை, சளி, காய்ச்சல் இருந்தால் உடனே அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ, அல்லது அரசு மருத்துவமனைக்கோ தெரியப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
தம்மம்பட்டி பகுதியில் வெயிலால் வீடுகளில் முடங்கிய மக்கள்!

நாகா்கோவில் நீதிமன்றத்தில் சமரச தினம் கடைப்பிடிப்பு

தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

