ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் பத்திர வழக்கில் பாஜகவுக்கு ஆதரவாக பாரத ஸ்டேட் வங்கி செயல்படுவதாகக் கூறி கோவையில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதிபெறும் முறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி பெற்றுள்ள தோ்தல் பத்திரம் தொடா்பான விவரத்தை மாா்ச் 13 -ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தோ்தல் பத்திரம் தொடா்பான விவரங்களை சமா்ப்பிக்க ஜூன் 30 -ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று வங்கி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், பாரத ஸ்டேட் வங்கியானது பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள வங்கியின் தலைமை அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகா் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலா் கணபதி சிவகுமாா், கவுன்சிலா்கள் சங்கா், சரளா வசந்த், ஹெச்எம்எஸ் ராஜாமணி, இருகூா் சுப்பிரமணியம், தாமஸ் வா்கீஸ் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com