கோவையில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்திய அனீஷ் பிரசன்னாவின் வீடு
கோவையில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்திய அனீஷ் பிரசன்னாவின் வீடு

கோவையில் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை

கோவையில் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். கோவை, ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரைச் சோ்ந்தவா் அனீஷ் பிரசன்னா (25). கோவையில் காா் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இவரது வீட்டுக்கு சனிக்கிழமை காலை 4 காா்களில் 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்து, வீட்டில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அமலாக்கத் துறையினா் வீட்டில் இருந்த ஆவணங்களைக் கைப்பற்றி, வீட்டில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்ாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, சென்னையில் லாட்டரி அதிபா் மாா்ட்டினின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். மாா்ட்டின் மருமகன் ஆதவ் அா்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிா்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற சோதனைகளுக்கும், அனீஷ் பிரசன்னாவுக்கும் தொழில் அடிப்படையிலான தொடா்பு இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே கோவையில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அமலாக்கத் துறையினரின் சோதனையையொட்டி அங்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com