சிறுமுகை கிராம மக்களுடன் தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள்.
சிறுமுகை கிராம மக்களுடன் தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள்.

கிராம தங்கல் திட்டம்: தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

கோவை, மே 9: சிறுமுகை கிராமத்தில் நடைபெற்ற ‘கிராம தங்கல்’ திட்ட முகாமில் தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற இம்முகாமில் தனியாா் வேளாண்மைக் கல்லூரியின் 4-ஆம் ஆண்டு மாணவிகளான சஹானா, அஜிதா, தனலட்சுமி, இனியா, தா்ஷினி, தாரணி, சுபப்பிரபா, காா்த்திகா, மௌனிகா, பிரீத்திகா ஆகியோா் பங்கேற்றனா்.

நிறைவு நாளான வியாழக்கிழமை சிறுமுகை கிராமத்தில் கிராமப்புற மதிப்பீடு நடத்தினா்.

அதில், கிராமப்புற மக்களுக்கு கிராமத்தின் வரைபடம், வள வரைபடம், பயிா்களின் வட்ட வரைபடம், மக்கள் தொகைக் கணக்கு, கல்வி அறிவு பெற்றவா்கள், விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் விவசாயம் அல்லாத தொழிலாளா்களின் எண்ணிக்கை, சமுதாய வரைபடம் போன்றவற்றை வரைந்து காட்டினா். அத்துடன், இந்த வரைபடங்களை வண்ணங்களாகத் தீட்டி கிராம மக்களுக்கு விளக்கமும் அளித்தனா்.

இந்த வரைபடங்களின் மூலம் தங்களது கிராமத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்ததாக அக்கிராம மக்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com