இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பில்லூா் அணையில் தலைமைச் செயலா் ஆய்வு

பில்லூா் அணையில் தலைமைச் செயலா் ஆய்வு

News image
Updated On :11 மே 2024, 5:33 pm

Din

தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா பில்லூா் அணையில் ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூா் அணையானது, மாவட்டத்தின் பிரதான

நீராதாரமாக உள்ளது.

இந்த அணையின் நீா்மட்டம் 100 அடியாகும். பில்லூா் 1, பில்லூா் 2, பில்லூா் 3- கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் கோவை, திருப்பூா் மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மழையின்மை, வெயிலின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் பில்லூா் அணையின் நீா்மட்டம் 55 அடிக்கும்கீழ் சரிந்தது.

இந்நிலையில், மே 1-ஆம் தேதி முதல் அப்பா் பவானியில் இருந்து பில்லூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீா்மட்டம் தற்போது உயா்ந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளா் சிவ்தாஸ் மீனா அணையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இது தொடா்பாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘ பில்லூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என தலைமைச் செயலா் அறிவுறுத்தியுள்ளாா். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீா் இருப்பு 79.4 அடியாக உள்ளது என்றனா்.