பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

கோவையில் காய்ச்சலால் மகன் பலி: தாய், தந்தை தற்கொலை

கோவையில் மகன் உயிரிழந்த சோகத்தில் தாய், தந்தை தற்கொலை.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - Din

Published On :5 நவம்பர் 2024, 12:18 pm IST

கோவை: கோவையில் வைரல் காய்ச்சலால் 7 வயது மகன் மரணமடைந்த சோகத்தில் தந்தையும் தாயும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

சிவகாசி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி வக்தசலா ஆகியோர் கோவை வேடம்பட்டி பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த 2 -ம் தேதி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அம்பிகா விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று அறையைக் காலி செய்ய ஹோட்டல் ஊழியர் கதவை தட்டி பார்த்தும் கதவு திறக்கவில்லை. மாற்று சாவியைக் கொண்டு அறையை திறந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளியவாறு இருவரும் உயிரிழந்தது கிடந்துள்ளனர்.

இதுகுறித்து காட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த பழனிச்சாமியின் அண்ணன் முருகேசனிடம் தகவல் தெரிவித்த காவல்துறையினர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், அவர்களுக்கு 7 வயதில் மகன் இருந்ததாகவும், வைரஸ் காய்ச்சல் வந்து இறந்து போனதால் இருவரும் மனமுடைந்து இருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோவை காட்டூர் காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.