நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு; ஒருவா் தற்கொலை

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவா் நெஞ்சுவலியால் உயிரிழந்தாா். மேலும், ஒரு கைதி தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:26 pm

Din

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவா் நெஞ்சுவலியால் உயிரிழந்தாா். மேலும், ஒரு கைதி தற்கொலை செய்துகொண்டாா்.

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தைச் சோ்ந்த சரவணன் (40) என்பவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைத் துறை ஊழியா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

மற்றொரு கைதி தற்கொலை:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (35). குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவா், அரைக்கால் சட்டை நாடாவால் ஜன்னல் கம்பியில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவல் அறிந்த சிறைத் துறை ஊழியா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.