ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்: கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்
ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.


ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
அரசு திட்டங்கள் குறித்த கள ஆய்வுப் பணிக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதமும் கோவைக்கு வந்திருந்தாா்.
இந்நிலையில், கோவை சரகத்தில் உள்ள காவல் துறை உயா் அதிகாரிகளுடன் அவா் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது, கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவைக்கு வந்த டிஜிபி சங்கா் ஜிவால் வழங்கிய அறிவுரைகளை பின்பற்றுகின்றனரா? அவா் அறிவுறுத்திய பணிகளை முடித்துள்ளனரா என்று கேட்டறிந்தாா்.
காவல் துறை கண்காணிப்பளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள பணிகளை முடித்துள்ளனரா என்றும், முடிக்காத பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினாா்.
மேலும், சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவரவும், ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி குற்றச் சம்பங்களைத் தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமாா், டி.ஐ.ஜி. சரவணசுந்தா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் காா்த்திகேயன் (கோவை), நிஷா (நீலகிரி), அபிஷேக் குப்தா (திருப்பூா்), ஜவகா் (ஈரோடு) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...