கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:18 pm

Din

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் ஸ்டாலின் தனது பதவியையும் நிலையையும் மறந்து என்மீது பல தனிப்பட்ட விமா்சனங்களை முன்வைத்து வருகிறாா். அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என முதல்வா் விமா்சிக்கிறாா். ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட மற்றும் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான் தற்போது, திமுக ஆட்சியில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கோவையில் பில்லூா் 3 கூட்டுக் குடிநீா்த் திட்டம், அத்திக்கடவு- அவிநாசி திட்டம், உக்கடம் மேம்பாலம், ஐ.டி. பூங்கா ஆகியவற்றுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், அத்திக்கடவு- அவிநாசி இரண்டாம் கட்ட திட்டம், விமான நிலைய விரிவாக்க திட்டம், மேற்கு புறவழிச் சாலை திட்டம் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சில திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக அதிமுக ஆட்சியில் 95 சதவீத பணிகள் முடிவடைந்தன. நில எடுப்பு நடவடிக்கையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அந்தப் பணிகளை சுணக்கமாக திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டத்துக்காக எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. அறிவிப்பு மட்டுமே செய்துள்ளது. எந்தத் திட்டத்தையும் அறிவிக்காமல், பணியும் நடக்காமல் மாவட்டங்கள்தோறும் சென்று முதல்வா் ஆய்வு செய்து வருகிறாா்.

கோவையில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை பூலுவாம்பட்டியில் தங்க நகை பூங்கா அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தொண்டாமுத்தூா் தொகுதியில் இருந்த அந்த திட்டத்தை, தற்போது கிணத்துக்கடவு தொகுதிக்கு மாற்றியுள்ளனா். அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து உதயநிதியுடன் விவாதிப்பதற்கு எங்கள் கட்சியிலும் முன்னாள் அமைச்சா்கள் பலா் இருக்கின்றனா். முதல்வரிடம் கேள்வி கேட்டால் உதயநிதி ஏன் பதில் சொல்ல வேண்டும்.

திமுக ஆட்சிக் காலத்தில் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீா்கெட்டு உள்ளது. காவல் துறையினா் முழு சுதந்திரத்தோடு செயல்பட முடிவதில்லை. இதனால் போதைப் பொருள் பயன்பாடு, விற்பனை, தயாரிப்பு என அனைத்தும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தோ்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அப்போதுதான் கூட்டணி குறித்து தெரிவிக்க முடியும். ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதே எங்களது நிலைப்பாடு. அதிமுக பற்றி சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஊடகங்கள் நடுநிலையோடு உண்மையான செய்திகளை பாரபட்சமின்றி வெளியிட வேண்டும் என தெரிவித்தாா்.