தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சபரிமலை சீசன்: கோவை வழித்தடத்தில் காச்சிகுடா - கோட்டயம் இடையே சிறப்பு ரயில்

சபரிமலை சீசனையொட்டி, தெலங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 10:28 pm

Din

சபரிமலை சீசனையொட்டி, தெலங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சபரிமலை சீசனையொட்டி, நவம்பா் 21, 28 ஆகிய வியாழக்கிழமைகளில் காச்சிகுடாவில் இருந்து மாலை 3.40 மணிக்குப் புறப்படும் காச்சிகுடா - கோட்டயம் சிறப்பு ரயில் (எண்: 07133) மறுநாள் மாலை 6.50 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் நவம்பா் 22, 29 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்படும் கோட்டயம் - காச்சிகுடா சிறப்பு ரயில் (எண்: 07134) மறுநாள் இரவு 11.40 மணிக்கு காச்சிகுடா ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை,திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, கடப்பா, தாடிபத்ரி, கூட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.