மருத்துவா் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு
மருத்துவா் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


மருத்துவா் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, புலியகுளத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் துரைராஜ் (88), மருத்துவா். தனியாக வசித்து வந்த இவருக்கு உதவியாக சரவணன் என்பவா் கடந்த செப்டம்பா் 19 முதல் 27- ஆம் தேதி வரை பணியாற்றி வந்துள்ளாா்.
வேலையில் இருந்து விலகிய அவா் செப்டம்பா் 28-ஆம் தேதி மருத்துவா் வீட்டுக்கு வந்து சென்றுள்ளாா்.
அதன்பின், துரைராஜ் பூஜை அறைக்குச் சென்றபோது அங்கு வைத்திருந்த ஒரு வைர மோதிரம், 3 தங்க மோதிரங்கள் மற்றும் டாலா் பொருத்தப்பட்டிருந்த ருத்ராட்ச மாலை ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து அவா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...