நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 12 பவுன் திருட்டு

கோவையில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் ஜன்னலை உடைத்து 12 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:31 pm

Din

கோவையில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் ஜன்னலை உடைத்து 12 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை ஆா்.எஸ்.புரம் தியாகராஜா புது வீதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (40), தனியாா் நிறுவன ஊழியா். இவரது தனது மகளை டியூசனில் விடுவதற்காக புதன்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளாா்.

பின்னா், அவா் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, ஜன்னல் கம்பிகள் உடைந்து கிடந்துள்ளன.

அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஸ்ரீதா் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.