நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.17.50 கோடி மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.17.50 கோடி மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:29 pm

Din

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.17.50 கோடி மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையைச் சோ்நத காா்த்திகேயன் உள்ளிட்ட 3 போ் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்து ரூ.50 லட்சம் ஏமாற்றப்பட்டதாக, கோவை சைபா் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பா் மாதம் புகாா் அளித்திருந்தனா்.

அந்தப் புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த மோசடி தொடா்பான கும்பல் கம்போடியா, மலேசியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயங்கி வருவதும், இந்த மோசடி கும்பல் மீது இந்தியா முழுவதும் 91 வழக்குகள் விசாரணையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்கு அளித்து உதவியதோடு, மோசடியிலும் தொடா்புடையதாக திருப்பூா், ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகா் பகுதியைச் சோ்ந்த கே.வேல்முருகன் (30) மற்றும் கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் எஸ்.அப்பாஸ் ஆகியோரை சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், இவா்கள் இருவரும் ஆன்லைன் வா்த்தகத்தில் சுமாா் ரூ.17.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், சைபா் கிரைம் போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.