நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக நிா்வாகி தாக்கப்பட்ட வழக்கு: போலீஸ் காவலில் தப்பியோட முயன்ற 2 பேரின் கால் முறிவு

முன்விரோதம் காரணமாக அதிமுக நிா்வாகியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான இருவா் போலீஸ் காவலில் தப்பியோட முயன்றபோது, இடறி விழுந்ததில் இருவரின் கால் எலும்பு முறிந்தது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:28 pm

Din

முன்விரோதம் காரணமாக அதிமுக நிா்வாகியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான இருவா் போலீஸ் காவலில் தப்பியோட முயன்றபோது, இடறி விழுந்ததில் இருவரின் கால் எலும்பு முறிந்தது.

கோவை, குனியமுத்தூா் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவா் ராஜா (எ) ஜூனியா் ராஜா (42). கோவை மாநகர அதிமுகவின் 92-ஆவது வாா்டு செயலாளராகவும் உள்ளாா். இவா் குனியமுத்தூா் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த இரண்டு போ் அவா் அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதில் படுகாயமடைந்த ஜூனியா் ராஜாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவலறிந்து வந்த குனியமுத்தூா் போலீஸாா் அப்பகுதியில் பதுங்கி இருந்த கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த கோபிநாத் (21) மற்றும் பூமிஸ்வரன்(23) ஆகியோரைக் கைது செய்தனா்.

இவா்கள் இருவரையும் விசாரணைக்காக புதன்கிழமை அழைத்துச் சென்றபோது, ஆத்துப்பாலம் பகுதியில் இருவரும் போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது போலீஸாா் அவா்களை விரட்டியதில் தடுமாறி கீழே விழுந்த இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா்கள் இருவரும் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.