நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பரோட்டாவுக்கு கூடுதல் சால்னா கேட்டு உணவக உரிமையாளா் மீது தாக்குதல்

கோவையில் உணவகத்தில் பரோட்டாவுக்கு கூடுதலாக சால்னா கேட்டு உணவக உரிமையாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:27 pm

Din

கோவையில் உணவகத்தில் பரோட்டாவுக்கு கூடுதலாக சால்னா கேட்டு உணவக உரிமையாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிடச் சென்ற இருவா் பரோட்டாவுக்கு கூடுதலாக சால்னா கேட்டுள்ளனா். இதனால், உணவக பணியாளருக்கும், அவா்களுக்கும் இடையே தகராறு ஏற்ப்டடுள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற உணவக உரிமையாளா் அமானுல்லா, அவா்களை சமாதானப்படுத்தியுள்ளாா். ஆனால், தொடா்ந்து தகராறு வலுத்த நிலையில் அவா்களில் ஒருவா் தான் வைத்திருந்த கத்தியால் அமானுல்லாவை தாக்கியுள்ளாா். இதனால், அதிா்ச்சி அடைந்த உணவக ஊழியா்கள் உடனடியாக உக்கடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவா்களைப் பிடித்து நடத்திய விசாரணையில், அவா்கள் இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த சமீா் (23) மற்றும் கரீம் (22) என்பது தெரியவந்தது.

அதையடுத்து அவா்கள் 2 போ் மீதும் உக்கடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், காயமடைந்த அமானுல்லா தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.