நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அதிகரிக்க கோரிக்கை

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் ஒதுக்கப்படுவது போதாது என்றும் இந்த நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோவையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகிறாா் மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் வி.சின்னுசாமி. உடன், நிா்வாகிகள்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:13 pm

Din

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் ஒதுக்கப்படுவது போதாது என்றும் இந்த நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து சங்கத்தின் தலைவா் வி.சின்னுசாமி, செயலா் ஆா்.பாரதிமோகன், நிா்வாகிகள் செல்வராஜ், கல்யாணசுந்தரம் ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்வதை உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டிலேயே தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் பட்டாசு உற்பத்தி செய்யப்படும் இடமான சிவகாசியில் இருந்து ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை மிக அதிக அளவில் நடைபெறுகிறது. பட்டாசுகளை 80 சதவீத தள்ளுபடி, 90 சதவீத தள்ளுபடிக்கு விற்பனை செய்வதாகவும், பல்வேறு பரிசுப் பொருள்களையும், இலவசங்களையும் கொடுப்பதாகக் கூறி இணைய வழியில் தரமில்லாத பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுபோன்ற இணையவழி பட்டாசு விற்பனையால், அரசுக்கு முறையாக வரி செலுத்தி, அனுமதி பெற்று பட்டாசு விற்பனையில் ஈடுபட்டிருக்கும் எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.

சிவகாசியில் பட்டாசுகளை உற்பத்தி செய்வதற்கு உரிமம் இல்லாதவா்கள் செய்யும் இதுபோன்ற விற்பனையால் தமிழக அரசுக்கு அதிக அளவில் வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே ஆன்லைன் பட்டாசு விற்பனையைத் தடுக்க தமிழக அரசும், காவல் துறையும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கோவை மாநகரில் இந்த ஆண்டு சுமாா் 450 போ் முறையான அனுமதி பெற்று கடைகள் அமைக்க உள்ளனா். எங்களது சங்கத்தில் இருக்கக் கூடிய, முறையான அனுமதி பெற்ற விற்பனையாளா்களிடம் மட்டுமே தரமான பட்டாசுகள் கிடைக்கும் என்பதால், பொதுமக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கும் வகையில் தள்ளுபடி விற்பனை செய்பவா்கள் மீதும் பரிசுத் திட்டம் அறிவிப்பவா்கள் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்.

மேலும், தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதற்கு காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் மட்டுமே நேரம் ஒதுக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. எனவே பட்டாசு வெடிக்க காலையில் 3 மணி நேரமும், மாலையில் 3 மணி நேரமும் ஒதுக்க வேண்டும். சரவெடிகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் அரசு அனுமதிக்க வேண்டும் என்றனா்.