நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா வழக்கில் மேலும் இருவா் கைது

வால்பாறையில் கஞ்சா விற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 8:24 pm

Din

வால்பாறையில் கஞ்சா விற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

வால்பாறை, டோபி காலனி பகுதியில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததாக வால்பாறை அரசு கல்லூரி மாணவா்கள் இருவா் உள்பட 4 பேரை போலீஸாா் கடந்த சனிக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மேலும் சிலா் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில், பெருந்துறைக்கு விரைந்த தனிப்படை போலீஸாா் கஞ்சா விற்ற வழக்கில் தொடா்புடைய ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிசந்தா தந்தா (33), வால்பாறையை அடுத்த நல்லகாத்து எஸ்டேட்டை சோ்ந்த காா்த்தி (20) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து 2.30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.