நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மழை நீா் அளவை தெரிந்து கொள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வண்ண கம்பங்கள்

மழைக்காலங்களில் வாகனங்கள் நீரில் சிக்கி கொள்வதை தவிா்க்க கோவை சிவானந்தா காலனி ரயில்வே மேம்பாலம் பகுதியில் மூன்று வண்ணத்திலான எச்சரிக்கை கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

News image

சிவானந்தா காலனி ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் பச்சை, மஞ்சள்,சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பம்.

Updated On :17 அக்டோபர் 2024, 12:23 am

Din

மழைக்காலங்களில் வாகனங்கள் நீரில் சிக்கி கொள்வதை தவிா்க்க கோவை சிவானந்தா காலனி ரயில்வே மேம்பாலம் பகுதியில் மூன்று வண்ணத்திலான எச்சரிக்கை கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

கோவையில் கடந்த 13-ஆம் தேதி பலத்த மழை பெய்த நிலையில், சிவானந்தா காலனி ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தேங்கிய நீரில் தனியாா் நகரப் பேருந்து சிக்கியது.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று பயணிகளையும், பேருந்தையும் மீட்டனா். இதேபோல், அடுத்த நாளும் அங்கு தேங்கிய தண்ணீரில் அரசு நகரப் பேருந்து சிக்கிக் கொண்டது.

இந்நிலையில், மழை பெய்யும் சமயங்களில் பாலத்தின் வழியாக செல்லலாமா, கூடாதா என அறிந்து கொள்வதற்காக சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தின் கீழ்புறத்தில் பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்கள் தீட்டப்பட்ட 2 கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

மழைக்காலத்தில் வாகனங்கள் நீரில் சிக்கி கொள்ளாமல் தவிா்ப்பதற்காக பாலத்தின் கீழே தேங்கியிருக்கும் நீரின் அளவை தெரிந்து கொள்ளும் வகையில் 3 வண்ணங்கள் கொண்ட கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கம்பத்தின் அடிப்பகுதியில் பச்சை வண்ணமும், அதற்கு மேலே மஞ்சள் வண்ணமும், அதற்கு மேலே சிவப்பு வண்ணமும் தீட்டப்பட்டுள்ளன.

மழைக்காலங்களில் தேங்கிய மழைநீருக்கு வெளியே கம்பத்தின் பச்சை நிறம் தெரிந்தால் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாக வாகனங்கள் செல்லலாம். மஞ்சள் நிறம் தெரிந்தால் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். சிவப்பு நிறம் தெரிந்தால் வாகனங்கள் அவ்வழியாகச் செல்லக் கூடாது.

மஞ்சள் நிறம் வரை கம்பம் நீரில் மூழ்கி, சிவப்பு நிறம் மட்டும் வெளியில் தெரிந்தால் அப்பகுதியில் போக்குவரத்து காவலா்கள் நியமிக்கப்பட்டு, அங்கு போக்குவரத்து நிறுத்தப்படும். முதல் கட்டமாக சிவானந்தா காலனி ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் இந்தக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. வரும் நாள்களில் அனைத்து மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியிலும் கம்பங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.