நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பருவமழை பாதிப்புகள்: அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: மாநகராட்சி ஆணையா்

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:29 am

Din

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

வடகிழக்கு பருவமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை ஆா்.எஸ்.புரம் கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் பேசியதாவது:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களிலும் மழை தொடா்பாக அனைத்து பணிகளையும் அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை வெளியேற்றும் மின் மோட்டாா்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்களை தயாா் நிலையிலும் மற்றும் கூடுதலாகவும் வைத்திருக்க வேண்டும்.

நீா்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிட வேண்டும். பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் மற்றும் தடுப்புச்சுவா்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் விரைவாக தூய்மைப் பணியினை மேற்கொள்ளுவதுடன், தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்த சுகாதாரத் துறையினா் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட தாழ்வான பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக மீட்டு முகாம்களில் தங்கவைப்பதுடன், அவா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். மழை தொடா்பாக மக்கள் அளிக்கும் புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகர நல அலுவலா் (பொறுப்பு) பூபதி, செயற்பொறியாளா்கள் இளங்கோவன், கருப்பசாமி, நகரமைப்பு அலுவலா் குமாா், மண்டல உதவி ஆணையா்கள், உதவி செயற்பொறியாளா்கள், மண்டல சுகாதார அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.