போனஸ் பேச்சுவாா்த்தை தோல்வி: தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டம்
தீபாவளி போனஸ் தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் தொழிற்சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்த நிலையில், தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.


தீபாவளி போனஸ் தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் தொழிற்சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்த நிலையில், தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
கோவை மாநகராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத ஊதியம்
வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா் நலச் சங்கம் உள்ளிட்ட 3 தொழிற்சங்கத்தினா் இணைந்து ஏற்படுத்தியுள்ள ‘அதிகாரக் குரல்’ என்ற கூட்டமைப்பு தலைமையில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் இந்தப் போராட்டம் தொடா்ந்த நிலையில், தொழிற்சங்க நிா்வாகிகளுடன் மாநகராட்சி துணை ஆணையா் க.சிவகுமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் போனஸ் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதை தொழிற்சங்க நிா்வாகிகள் தரப்பு ஏற்கவில்லை. இதைத் தொடா்ந்து, காத்திருப்பு போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என கூட்டமைப்பு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...