நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை குறைகேட்பு முகாம்

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 19) நடைபெற உள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:12 pm

Din

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 19) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் விதமாக, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைகேட்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம் வருகிற சனிக்கிழமை (அக்டோபா் 19) காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை குறைகேட்பு முகாம் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் மாற்றம் மற்றும் குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.