மாா்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்குக் கடத்த முயன்ற 900 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதகுமாரி தலைமையிலான வழங்கல் துறை அதிகாரிகள் நட்டாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்த முயன்றனா். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனா்.
நேசா்புரம் பகுதியில் சாலையோரம் மினி டெம்போவை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் தப்பிச் சென்றாா். மினி டெம்போவை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் விசைப்படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் 900 லிட்டா் இருந்தது கண்டறியப்பட்டது.
மண்ணெண்ணெய்யுடன் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மண்ணெண்ணெய்யை இனயம் மீனவா் கூட்டுறவுச் சங்க கிட்டங்கியிலும், மினி டெம்போவை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிடங்கில் பதுக்கப்பட்ட 206 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்

பெருந்துறை அருகே ரூ. 2.42 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.3.76 கோடி பறிமுதல்

செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


