வால்பாறை மானாம்பள்ளி வனப் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 5 கும்கி யானைகள்
வரகளியாறு முகாமில் இருந்து வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி வனப் பகுதிக்கு 5 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மானாம்பள்ளி வனப் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட கும்கி யானைகள்.

மானாம்பள்ளி வனப் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட கும்கி யானைகள்.
வரகளியாறு முகாமில் இருந்து வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி வனப் பகுதிக்கு 5 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச் சரகத்துக்குள்பட்ட வரகளியாறு பகுதியில் வனத் துறையின் வளா்ப்பு யானைகள் முகாம் உள்ளது. அங்கு கும்கி யானைகளுடன் சோ்த்து 26 வளா்ப்பு யானைகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் வரகளியாறு முகாமில் இருந்த கும்கி யானைகள் மானாம்பள்ளி வனப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, பருவமழை தொடங்கிய பின் ஜூன் மாதத்தில் வரகளியாறு முகாமுக்கு மீண்டும் கொண்டுச் செல்லப்பட்டன.
இதனிடையே, தற்போது வரகளியாறு முகாமில் பாகன்கள் குடியிருப்பு, உணவு தயாரிக்கும் அறைகள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அங்குள்ள யானைகளில் 5 கும்கி யானைகள் மானாம்பள்ளி வனப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
யானை பாகன்கள் வரகளியாறு முகாம்போல யானைகளுக்கு பயிற்சி அளிப்பது, உணவு வழங்குவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் வனத் துறையினா் முன்னிலையில் மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...