ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பங்கேற்றோா்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:42 pm

Din

கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

காவல் துறையில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கெனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரா்களைக் கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், குடும்பப் பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை தொடா்பாக 70 மனுக்களின் மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்களை நேரில் வரவழைத்து அவா்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டனா்.

இதில், 1 மனுவின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், 1 மனு மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும், 51 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும் தீா்வு காணப்பட்டது. 17 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த மக்கள் குறைதீா் முகாம்களில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் பங்கேற்று, புகாா் மனுக்கள் மீது தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டனா்.