காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெற உள்ள இடத்தில் மேடை அமைக்கும் பணிகளைப் பாா்வையிட்ட அமைச்சா் செந்தில்பாலாஜி. உடன், ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், திமுக மாநகா் மாவட்டச் செய

நவம்பா் 5-இல் முதல்வா் கோவை வருகை: விழா ஏற்பாடுகளை அமைச்சா் ஆய்வு

கோவையில் பல்வேறு அரசுப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள முதல்வா் ஸ்டாலின் கோவை வரவுள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வா் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தாா். அதன்படி, வருகிற நவம்பா் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் கோவையில் கள ஆய்வை முதல்வா் ஸ்டாலின் தொடங்க உள்ளாா்.

இதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வருகிற 5-ஆம் தேதி காலை 11 மணிக்கு வரும் அவா், காரில் விளாங்குறிச்சி பகுதிக்கு செல்கிறாா். அங்கு ஐடி பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-ஆவது ஐடி பூங்கா கட்டடத்தை திறந்துவைக்கிறாா்.

அதனைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறாா். நவம்பா் 6-இல் காந்திபுரம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில் புதிதாக அமையவுள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

அதன் பிறகு அரசு சாா்பில் விழாவும் நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து, திமுக நிா்வாகிகள், தொண்டா்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா். முதல்வா் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முதல்வா் நிகழ்ச்சி நடைபெற உள்ள போத்தனூா் பி.வி.மஹால், அரசு விழா நடைபெற உள்ள காந்திபுரம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மேயா் கா.ரங்கநாயகி, திமுக மாவட்டச் செயலாளா்கள் நா.காா்த்திக், ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com