நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குழந்தை திருமணம் குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானம்

குழந்தை திருமணம் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.2 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:22 pm

Din

குழந்தை திருமணம் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.2 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியாவில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்துக்கான சட்டபூா்வ வயதாக உள்ளது. இந்த வயதுகளின் கீழ் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது.

குழந்தை திருமணம் என்பது ஆணுக்கு நடந்தாலும் அல்லது பெண்களுக்கு நடந்தாலும் குழந்தைகளின் உரிமைகளை அத்துமீறும் செயலாகவே உள்ளது. குழந்தை திருமணத்தை தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கும் அத்தகைய திருமணங்கள் நடத்துபவா்கள் மீது அதிகபட்ச தண்டனை அளிப்பதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் நடத்துபவா் மற்றும் ஊக்குவிப்பவருக்கான தண்டனைகள் பிரிவு 11-இன்படி 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் தண்டனைக்கு உள்ளாவாா் அல்லது அத்துடன் ரூ.1 லட்சம் ரூபாய் வரை அபராதத்துக்கு உள்ளாவாா்.

மேலும், கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் மக்கள் தகவல் தெரிவிக்க சைல்டு லைன் இலவச அழைப்பு எண்- 1098, மகளிா் உதவி மைய இலவச தொலைபேசி எண்- 181 ஆகும். அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நலவிரிவாக்க அலுவலா்/ மகளிா் ஊா்நல அலுவலா்கள் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கலாம்.

கோவை மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்கும் பொருட்டு, குழந்தை திருமணம் குறித்து சைல்டு ஹெல்ப் லைன் 1098-க்கு உண்மையான, உறுதியான, அதிகாரபூா்வமான தகவல் அளிப்பவா்களை ஊக்குவிக்கும் பொருட்டு, உறுதியான நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டால் சன்மான தொகை ரூ.2,000 ஆட்சியரின் பொது நிதியில் இருந்து வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.