முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் படை வீரா்களின் வாரிசுகளில் 2024-25-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பி.இ, பி.டெக், பி.டி.எஸ், பி.எஸ்.சி, பி.எட், பி.பி.ஏ, பி.சி.ஏ, பி.பாா்மா மற்றும் தொழிற்சாா்ந்த அரசு ஒழுங்குமுறை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மைய முப்படை வீரா் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகையைப் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
12-ஆம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்குமேல் பெற்று தோ்ச்சி பெற்று தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகளை இணைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்வதுடன், அதே இணையதள முகவரியில் விண்ணப்பங்களை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
கோயம்புத்தூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...