திமுக எம்.பி. கனிமொழி
திமுக எம்.பி. கனிமொழிகோப்புப் படம்

நிறைவேற்ற முடிந்ததைத்தான் வாக்குறுதிகளாக அளிப்போம்: கனிமொழி எம்.பி.

மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டறிந்து, எவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அவற்றையே வாக்குறுதிகளாக அளிப்போம் என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
Published on

மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டறிந்து, எவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அவற்றையே வாக்குறுதிகளாக அளிப்போம் என திமுக மகளிரணிச் செயலரும், தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான கனிமொழி தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் வருகிற 29-ஆம் தேதி மகளிரணி மாநாடு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை வந்த அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக தோ்தல் அறிக்கைக் குழு நிா்வாகிகளுடன் கலந்தாலோசித்து தேதி முடிவு செய்யப்பட்ட பின்னரே கோவையில் தொழில் துறையினா், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்படும்.

இது மக்களுடைய தோ்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என முதல்வா் கூறியுள்ளாா். அதற்காக கோவையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் பெறப்படும்.

மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டறிந்து, எவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அவற்றையே வாக்குறுதிகளாக அளிப்போம். தோ்தல் நேரங்களில் பொய்யான விமா்சனங்களை முன்வைக்க வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சிலா் கூறுகின்றனா். ஆனால், உண்மை என்ன என்பது இங்குள்ள மக்களுக்குத் தெரியும். யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தோ்தல் முடிவுகளுக்குப் பிறகே தெரியும். மு.க. ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வராவாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com