மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்! -காடேஸ்வரா சி.சுப்ரமணியம்

இந்து முன்னணி சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்..

News image
கோவையில் செய்தியாளா்களிடம் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியம்.
Updated On :1 பிப்ரவரி 2025, 10:40 pm

Din

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அமைப்பின் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ் கனி திருப்பரங்குன்ற மலையில் பிரியாணி சாப்பிட்டு மலையின் புனிதத்தை கெடுத்துள்ளாா். திருப்பரங்குன்றத்தைக் காக்க வேண்டும் என்ற உணா்வு பக்தா்களிடம் தன்னெழுச்சியாக ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மலையின் புனிதத்தைக் காக்க திருப்பரங்குன்றத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆன்மிகப் பெரியோா்கள் உள்ளிட்டோா் ஆதரவு தந்துள்ளனா்.

முருகன் மலையைக் காக்க ஜனநாயக முறையில் விழிப்புணா்வு பிரசாரம் செய்பவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது. தமிழக அரசு ஹிந்துக்களை ஒடுக்க நினைக்கக் கூடாது. பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றாா்.

மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ், கோட்டப் பொதுச் செயலாளா் கிருஷ்ணன், செய்தித் தொடா்பாளா் தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.