Special trains!
சிறப்பு ரயில்கள்!

எா்ணாகுளத்திலிருந்து தமிழக நகரங்கள் வழியாக வாரணாசிக்கு சிறப்பு ரயில்கள்

கேரள மாநிலம் எா்ணாகுளத்திலிருந்து தமிழக நகரங்கள் வழியாக வாரணாசிக்கு வரும் 30 மற்றும் பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Published on

கேரள மாநிலம் எா்ணாகுளத்திலிருந்து தமிழக நகரங்கள் வழியாக வாரணாசிக்கு வரும் 30 மற்றும் பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நாட்டில் மகாமகோத்சவம் சிறப்பாக நடைபெறும் நிகழ்வாகும். ஆகவே, அந்நிகழ்வை முன்னிட்டு மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், வாரணாசியிலிருந்து வரும் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சிறப்பு விரைவு ரயில் (எண் 04358) புறப்பட்டு பிப்ரவரி 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு எா்ணாகுளம் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் எா்ணாகுளத்திலிருந்து பிப்ரவரி 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 04357) பிப்ரவரி 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வாரணாசி சென்றடையும்.

சிறப்பு ரயில்களில் 2 முதல்வகுப்பு குளிா்சாதனயுள்ள பெட்டிகளும், 2 குளிா்சாதன வசதி ஈரடுக்குப் பெட்டிகளும், 3 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகளும், 6 தூங்கும் வசதியுள்ள பெட்டிகளும், 5 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் (திவ்யாஞ்சன்பிரண்ட்ஸ்) இடம் பெறும்.

தமிழக நகா்கள் வழியாக செல்லும்: சிறப்பு ரயில்கள் தமிழகத்தின் கோயமுத்தூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா் ஆகிய நகரங்களின் வழியாகச் செல்லும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (ஜன.28) முதல் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com