திருவள்ளுவா் தினம்: இறைச்சி விற்பனைக்கு தடை
திருவள்ளுவா் தினத்தையொட்டி, கோவை மாநகரப் பகுதிகளில் ஜனவரி 15-ஆம் தேதி இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு (ஜனவரி 15), அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகளை அன்றைய தினம் மூடும்படி தெரிவிக்கப்படுகிறது. மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சத்தி சாலை, போத்தனூா் ஆடு, மாடு அறுவைமனைகளும் செயல்படாது.
இந்த உத்தரவை மீறி செயல்படுவோா் மீது மாநகராட்சி சட்ட விதிகளின் படி, அபராதம், பறிமுதல் மற்றும் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.