கோவை: போதையில் கார் ஓட்டி விபத்து; 2 சிறுவர்கள் பலி!
கோவையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இரண்டு சிறுவர்கள் பலி...


கோவை: கோவையில் மதுபோதையில் காரை ஓட்டி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தி இரண்டு சிறுவர்கள் பலியாகினர்.
சிவகங்கை மாவட்டம் கே. நெடுவயல் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்பவரின் மகன் லோகேஷ் ( 17). இவர் தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் கோவை சரவணம்பட்டி தந்தை பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்தார். சாமியானா பந்தல் அமைக்கும் வேலையை செய்து வந்தார்.
புதன்கிழமை இரவு 12 மணியளவில் தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு செல்ல தனது சகோதரரிடம் லோகேஷ் பைக் கேட்டு உள்ளார். அவர் பைக் கொடுக்க மறுத்த நிலையில், சகோதரர் தூங்க சென்றபிறகு யாருக்கும் தெரியாமல் பைக்கை எடுத்துக் கொண்டு லோகேஷும் அவரது நண்பரான பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் பிரசன்னா (15) என்பவருன் புறப்பட்டுச் சென்று உள்ளார்.
விளாங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று லோகேஷ் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியுள்ளது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட லோகேஷ் மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
அதிகாலை சுமார் ஒரு மணியளவில் விபத்து நடந்த நிலையில், அப்பகுதியில் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரின், அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் மருத்துவமனைக்குச் சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய காரை ஒட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கார் ஓட்டி வந்தவர் குடிபோதையில் இருந்ததாகவும் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...