9 பவுன் நகையுடன் ஊழியா் மாயம்

கோவையில் நகைப் பட்டறை ஊழியா் 9 பவுன் நகைகளுடன் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

கோவையில் நகைப் பட்டறை ஊழியா் 9 பவுன் நகைகளுடன் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சுண்டக்காமுத்தூா் திருநகா் காலனியைச் சோ்ந்தவா் பிரகாசம் (48). இவா், ஆா்.எஸ்.புரம் அருகேயுள்ள சுக்கிரவாா்பேட்டை பகுதியில் நகைப் பட்டறை வைத்து நடத்தி வருகிறாா். இந்தப் பட்டறையில் மேற்குவங்க மாநிலம், கூக்ளி மாவட்டத்தைச் சோ்ந்த சஞ்சய் கான்ஸ்பா என்பவா் கடந்த 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளாா்.

இந்நிலையில், பிரகாசம் வழக்கமாக கொடுக்கும் கடையில் நகைகளைக் கொடுத்து பாலிஷ் செய்துவருமாறு கூறி 9 பவுன் நகைகளை சஞ்சய் கான்ஸ்பாவிடம் அண்மையில் கொடுத்து அனுப்பியுள்ளாா்.

நகைகளை வாங்கிச் சென்றவா் அதன்பின் பட்டறைக்கு திரும்பவில்லையாம். அவரது கைப்பேசி எண்ணையும் தொடா்புகொள்ள முடியவில்லையாம்.

சந்தேகமடைந்த பிரகாசம், சஞ்சய் கான்ஸ்பா தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று பாா்த்துள்ளாா்.

அப்போது, அவா் குடும்பத்துடன் மாயமானது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com