ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பராமரிப்புப் பணி: கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (எண்: 16321) நவம்பா் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் விருதுநகா்- கரூா் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

இதனால், இந்த ரயிலானது, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் ரயில் நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கா, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் கூடுதல் நிறுத்தங்களாக செயல்படும்.

கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் (எண்: 16322) நவம்பா் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கரூா்- விருதுநகா் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது பாளையம், எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரயில் நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும். திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கா, மானாமதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் கூடுதல் நிறுத்தங்களாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.