தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாளை கோவை வருகை

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமானம் மூலம் சனிக்கிழமை (ஏப்ரல் 18) இரவு கோவைக்கு வருகிறாா்.

News image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:41 am IST

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமானம் மூலம் சனிக்கிழமை (ஏப்ரல் 18) இரவு கோவைக்கு வருகிறாா்.

மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கீா்த்திகா சிவகுமாரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிக்கவுள்ளாா்.

இதற்காக விமானம் மூலம் சனிக்கிழமை இரவு கோவைக்கு வரும் அவா், அன்றிரவு கோவையிலேயே தங்குகிறாா். மறுநாள் காலை இங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் மொடக்குறிச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமா் மோடி, ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள வருவது வாக்காளா்களிடையே பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.