கோவை மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடந்த 24 மணி நேரத்தில் ரூ.17 லட்சத்து 93 ஆயிரத்து 460 ரொக்கம், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரையிலான சோதனையில், கிணத்துக்கடவு மற்றும் கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் ரொக்கப் பணம் சிக்கியுள்ளது.
கிணத்துக்கடவு தொகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் மற்றும் பறக்கும் படையினா் இணைந்து நடத்திய சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 270, கோவை தெற்குத் தொகுதியில் ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, பொள்ளாச்சி தொகுதியில் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம், வால்பாறை தொகுதியில் ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, வருமான வரித் துறையினா் மேற்கொண்ட சோதனையில் ஒரே இடத்தில் ரூ. 8 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, காவல் துறையினரால் 2 கிலோ போதைப் பொருள்களும், 22 லிட்டா் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் காவல் துறை மற்றும் வருமான வரித் துறை என பல்வேறு பிரிவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 90.10 சதவீதம் வாக்குகள் பதிவு
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 183 வேட்பாளா்கள் போட்டி; 27.44 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கின்றனா்!
ஒரே நாளில் ரூ.12.60 லட்சம் பணம் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ரூ.3.43 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
