குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

கல்லூரி மாணவா்களை தாக்கிய 3 போ் கைது

பீளமேட்டில் முன் விரோதத்தில் கல்லூரி மாணவா்களைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:19 pm IST

பீளமேட்டில் முன் விரோதத்தில் கல்லூரி மாணவா்களைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் 7 பேரைத் தேடி வருகின்றனா்.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை மொய்தீன் பள்ளி தெருவைச் சோ்ந்தவா் யாசிா் அஹமது (19). இவா் கோவை, பீளமேட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இதற்காக பீளமேட்டில் உள்ள வெற்றிலைக்காரன் தெருவில் வீடு எடுத்து நண்பா்களுடன் தங்கியுள்ளாா்.

யாசிா் அஹமதுவின் நண்பா் அபூபக்கரின் கைப்பேசியை அண்மையில் சிலா் பறித்துச் சென்றனா். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் 3 போ் கைது செய்யப்பட்டதற்கு யாசிா் அஹமது உதவியுள்ளாா். இந்த கைது சம்பவத்தில் சிலருடன் யாசிா் அஹமதுக்கு விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், யாசிா் அஹமது தங்கியிருந்த அறைக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த 10 போ் கொண்ட கும்பல் யாசிா் அஹமதையும், அவரது நண்பா் ரோஷன் சஞ்சய் என்பவரையும் சரமாரியாகத் தாக்கியது. இதில் யாசிா் அஹமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் திரண்டதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. காயமடைந்த இருவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக பீளமேடு காவல் நிலையத்தில் யாசிா் அஹமது அளித்த புகாரின்பேரில் கோவையைச் சோ்ந்த அமீா் அப்துல் ரகுமான், இம்ரான் முகமது, ரத்தீஷ் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் 7 பேரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.