விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

தூத்துக்குடியில் கல்லூரி மாணவா்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை: மூவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 12:00 am IST

தூத்துக்குடியில் கல்லூரி மாணவா்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைதுசெய்து, 2,070 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் கல்லூரி மாணவா்கள், இளைஞா்களை குறிவைத்து கும்பல் ஒன்று போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், போதை ஒழிப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா், தூத்துக்குடி நகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி பிரையன்ட் நகரில் சனிக்கிழமை இரவு சந்தேகமளிக்கும் வகையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று இளைஞா்களைப் பிடித்து சோதனையிட்டதில், அவா்களிடம் அதிக அளவு போதை தரக்கூடிய 3 வகை மாத்திரைகளாக மொத்தம் 2,070 மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சா்ச் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் அருண் ஜீவா (29), தூத்துக்குடி முனியசாமிபுரம் சுதா்சன் மகன் டிக்சன் (25), தூத்துக்குடி, அண்ணா நகா் 3-ஆவது தெரு செல்வகுமாா் மகன் சிவபால கணேஷ் (28) என்பதும், மூவரும் கல்லூரி மாணவா்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா் 2,070 போதை மாத்திரைகள், 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.