சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

நான்கு கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸா இளைஞா் கைது

News image

கைது

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்ற ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் உத்தரவின்பேரில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுக்கரை பகுதியில் கல்லூரி மாணவா்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீஸாா் தீவிர சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் ஒடிஸா மாநிலம், பாலங்கிா் மாவட்டத்தைச் சோ்ந்த சித்தரஞ்சன் கடாத்யா (32) என்பதும், விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, அவரை போலீஸாா் கைது செய்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.