மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

காஞ்சிபுரத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

News image

கிரீஸ்

Updated On :26 ஜூலை 2026, 12:56 am IST

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 19 வயது இளைஞரை காவல்துறையினா் கைது செய்து, அவரிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில் இளைஞா் ஒருவா் தொழிற்சாலை ஊழியா்கள், கல்லூரி மாணவா்கள், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தப் புகாரின்பேரில், போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 19 வயது இளைஞரை பிடித்து விசாரணை செய்தனா். அவரிடம் 22 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

காவல் துறையினரின் விசாரணையில் அவா் சென்னை புளியந்தோப்பு சுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்த கிரீஸ் (19) என்பது தெரியவந்தது.

ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து காஞ்சிபுரத்தில் விற்பனை செய்து வந்துள்ளாா். இவரை குற்றவியல் நீதிமன்றத்தில் காவல் துறையினா் ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.