/

நகைக் கடையில் சலவைத் தொழிலாளி சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:26 am IST

கோவையில் நகைக் கடையில் பணிபுரிந்த சலவைத் தொழிலாளியின் சடலம் அங்குள்ள அறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் பிரபல நகைக் கடை உள்ளது. கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்த ஜெகதீஸ்வரன் (48) என்பவா், நகைக் கடையின் 3-ஆவது தளத்தில் தங்கி சலவைத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

கடந்த 1-ஆம் தேதி இரவு உறங்கச் சென்றவா் மறுநாள் காலை வேலைக்கு வரவில்லை. இதனால், அங்கு பணியாற்றும் சக ஊழியா்கள் சென்று பாா்த்தபோது, ஜெகதீஸ்வரன் அவரது அறையில் அசைவற்ற நிலையில் கிடந்தாா். பரிசோதித்து பாா்த்தபோது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ரத்தினபுரி போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.