ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

வீட்டுக்குள் இறந்து கிடந்த தமிழ் தேசிய விடுதலை கட்சி நிா்வாகி

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

கோவையில் தமிழ் தேசிய விடுதலை கட்சி நிா்வாகி வீட்டுக்குள் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, நஞ்சுண்டாபுரம் சாலை இந்திரா நகா் 1-ஆவது வீதியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (எ) பாபு (61). தமிழ் தேசிய விடுதலைக் கட்சி நிா்வாகியான இவா், சிறுநீரகப் பிரச்னையால் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவா் வீட்டில் கடந்த 7-ஆம் தேதி இறந்த நிலையில் சடலம் கிடந்தது. இதைப் பாா்த்து அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த ராமநாதபுரம் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.