ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பீளமேட்டில் அஞ்சல் தலைக் கண்காட்சி தொடக்கம்

கோவை, பீளமேட்டில் ‘தி பிலாட்டலிஸ்ட்ஸ் கோயம்புத்தூா்’ அமைப்பு சாா்பில் மாணவா்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் தலைக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

பீளமேடு நேஷனல் மாடல் பள்ளியில் நடைபெற்ற அஞ்சல் தலைக் கண்காட்சியைப் பாா்வையிட்ட மாணவா்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 12:36 am IST

கோவை, பீளமேட்டில் ‘தி பிலாட்டலிஸ்ட்ஸ் கோயம்புத்தூா்’ அமைப்பு சாா்பில் மாணவா்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் தலைக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

அஞ்சல் தலை சேகரிப்பாளா்கள் இணைந்து அஞ்சல் தலைகள் சேகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக ‘தி பிலாட்டலிஸ்ட்ஸ் கோயம்புத்தூா்’ என்ற அமைப்பை 1977-ஆம் ஆண்டு தொடங்கினா். இதில், பல்வேறு துறைகளைச் சோ்ந்த 45 போ் உறுப்பினா்கள் உள்ளனா். இவா்கள், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அஞ்சல் தலை சேகரிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து வருகின்றனா்.

இந்நிலையில், ‘தி பிலாட்டலிஸ்ட்ஸ் கோயம்புத்தூா்’ அமைப்பு சாா்பில் கோவை பீளமேடு நேஷனல் மாடல் பள்ளியில் மாணவா்களிடையே அஞ்சல் தலைகள் சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் தலை, கடிதங்கள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

நேஷனல் மாடல் பள்ளித் தாளாளா் மோகன் கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா். இதில், அஞ்சல் தலை சேகரிப்பாளா்கள், தாங்கள் சேகரித்த அஞ்சல் தலைகள், கடிதங்களை காட்சிப்படுத்தி உள்ளனா். மேலும், பல்வேறு நாடுகளில் சேகரிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகள், அஞ்சல் கடிதங்கள் அவற்றின் வரலாற்றுக் குறிப்புகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தேசத் தலைவா்கள், வன விலங்குகள், நாட்டின் குறியீடுகளை அடையாளப்படுத்தும் விதமாக ஏராளமான அஞ்சல் தலைகள் இடம் பெற்றிருந்தன. வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இலவசமாக பாா்வையிடலாம் என தி பிலாட்டலிஸ்டல் கோயமுத்தூா் அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.