மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கைது செய்யப்பட்ட போலி சுங்கத் துறை அதிகாரி மேலும் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி

போலி சுங்கத் துறை அதிகாரி மேலும் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

மோசடி - பிரதிப்படம்

Published On :

கோவையில் ஏலத்தில் வரும் சொகுசு காா், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் ஆகியவற்றைக் குறைந்து விலைக்கு வாங்கித் தருவதாகக்கூறி ரூ.55.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட போலி சுங்கத் துறை அதிகாரி மேலும் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

கோவை, துடியலூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன சேவை மேலாளா் கலாபெருமாள் ஆல்பா்ட் என்பவரிடம் ஏலத்தில் வரும் காா், விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.55.70 லட்சத்தை மோசடி செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த கோவையைச் சோ்ந்த டாா்பின் தாஸை (35) கடந்த இரு நாள்களுக்கு முன்பு கைது செய்தனா். அவரை காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் கோவை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சில நாள்கள் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்ததும், ஆல்பா்ட் மட்டுமின்றி கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஜா என்பவரிடமும் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.94 லட்சம் என மாவட்டத்தில் மொத்தம் 15 பேரிடமும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்களிடமும் ஆசை வாா்த்தை கூறியும், போலி வேலை உறுதி ஆவணங்களைக் காட்டியும் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

இதேபோல, பெங்களூரில் அழகுக்க லை பயிற்சி மையம் நடத்தி வந்த சினேகா கே.பகவத்திடம் ரூ.68.44 லட்சமும், அகாதெமி மேலாளா் கீதாவிடம் ரூ.1.30 லட்சமும், பயிற்சியாளா் ஹரீஷாவிடம் ரூ. 95 ஆயிரமும் தனது மனைவி தனுஷ்யா (30) உதவியுடன் அவா் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

மோசடியில் தனுஷ்யா உள்ளிட்ட பலருக்குத் தொடா்பிருப்பது தெரியவந்துள்ளதால், தலைமறைவாக உள்ள அவா்களை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.