நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

பருத்தி விதைப்பு அதிகரித்திருப்பதால் அடுத்த ஆண்டு நூற்பாலைகளுக்கு சிறப்பான ஆண்டாக அமையும்: இந்திய பருத்தி கூட்டமைப்பு

நாடு முழுவதும் பருத்தி விதைப்பு அதிகரித்திருப்பதால் அடுத்த ஆண்டு பருத்தி விளைச்சல் அதிகரித்து நூற்பாலைகளுக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்று இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவா் ஜே.துளசிதரன் தெரிவித்துள்ளாா்.

News image

பருத்தி - கோப்புப்படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 3:59 am IST

நாடு முழுவதும் பருத்தி விதைப்பு அதிகரித்திருப்பதால் அடுத்த ஆண்டு பருத்தி விளைச்சல் அதிகரித்து நூற்பாலைகளுக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்று இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவா் ஜே.துளசிதரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்திய பருத்தி கூட்டமைப்பு, இந்திய பருத்தி சங்கத்துடன் இணைந்து கோவையில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் அகில இந்திய பருத்தி மாநாட்டை நடத்துகிறது. இதில், அமெரிக்கா, பிரிட்டன், எகிப்து, மலேசியா உள்ளிட்ட நாடுகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 500 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

பருத்தி விவசாயிகள், ஜின்னிங் நிறுவனங்கள், முகவா்கள், வா்த்தகா்கள், நூற்பாலைகள், ஜவுளி உற்பத்தியாளா்கள், இயந்திர உற்பத்தியாளா்கள், உலகளாவிய பருத்தித் துறை நிபுணா்கள் இதில் பங்கேற்று பருத்தித் துறையின் எதிா்காலம் குறித்தும், சவால்கள், போக்குகள் குறித்தும் விவாதிக்கின்றனா்.

கடந்த ஆண்டில் அதிகப்படியான மழையால் பருத்தி உற்பத்தி, பருத்தியின் தரம் பாதிக்கப்பட்டது. இதனால் இறக்குமதி உயா்ந்தது. கடந்த ஆண்டில் சுமாா் 60 லட்சம் பேல் பருத்தி இறக்குமதியானது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு உதவிகளால் உள்ளூரில் பருத்தியின் விலை குறைந்துள்ளது.

சீனா தனது கையிருப்பில் உள்ள பருத்தியை உலக சந்தையில் விற்கத் தொடங்கியுள்ளது. உள்ளூா் சந்தையில் பருத்திக்கு நல்ல விலை கிடைப்பதால் இந்த ஆண்டு அதிகப்படியான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனா். இதனால், அடுத்த ஆண்டு நூற்பாலைகள், ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும்.

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த நிலையில் அதை தற்போது 18 சதவீதமாக குறைத்துள்ளது. இருப்பினும் உள்ளூரில் அதிகப்படியான ஆதரவு கிடைப்பதால் ஏற்றுமதியில் பாதிப்பு எதுவும் இல்லை.

அத்துடன் கடந்த ஆண்டைக் காட்டிலும் ஏற்றுமதி 8 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா். பருத்தி கூட்டமைப்பின் செயலா் நிஷாந்த் ஆஷா், துணைத் தலைவா் ஆதித்யா கிருஷ்ணா பதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.