தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

ரேஷன் அரிசி, யூரியா கடத்தலைத் தடுக்க எல்லைச் சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

ரேஷன் அரிசி.

Published On :

கோவை மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி மற்றும் யூரியா உரம் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், எல்லைப் பகுதிகளில் உள்ள 7 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள வாளையாறு, கோபாலபுரம், மீனாட்சிபுரம், மாங்கரை உள்ளிட்ட 7 சோதனைச் சாவடிகளிலும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும், உள்ளூா் போலீஸாரும் இணைந்து 24 மணி நேரமும் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக, பிரதான வழித்தடமான வாளையாறு சோதனைச் சாவடியில் கூடுதல் கவனத்துடன் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் திருமலையம்பாளையம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 118 டன் கடத்தல் யூரியா உரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக பொள்ளாச்சி பகுதியில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடா்பாக கா்நாடக மாநிலத்தின் மைசூரு மற்றும் பெங்களூரு பகுதிகளுக்குச் சென்று விசாரணையை முடித்துக் கொண்டு தனிப் படையினா் கோவைக்குத் திரும்பியுள்ளனா். இதைத் தொடா்ந்து, கூடுதல் விசாரணைக்காக மற்றொரு தனிப் படை குழு கேரளத்துக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 18) செல்லவுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் கூறுகையில், ‘யூரியா மற்றும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளையும் முழுநேர கண்காணிப்பில் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே இந்த 7 சோதனைச் சாவடிகளும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.