ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கோவையில் வீட்டின் முன் இருந்த தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:20 am IST

கோவையில் வீட்டின் முன் இருந்த தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கோவைப்புதூா் லாவண்யா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபமாலை (77). இவா் தனது மகளுடன் வசித்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டின் முன் உள்ள தண்ணீா்த் தொட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக தவறி தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்து நீரில் மூழ்கினாா்.

அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரது மகள், ஜெபமாலையை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.